Friday, September 25, 2009

கலைமகள் விழா

வாகீசர் தமிழ்ப்பள்ளியின் கலைமகள் விழா புரட்டாசி 8ல் நடைப்பெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலைமகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றனர்.

Friday, September 11, 2009

வாகீசர் எங்கள் வாகீசர்!!!


வனப்பு மிகுந்த இயற்கைதனை
வளைத்திருக்கும் வாகீசர்!

வரலாற்றுத் தடயங்களை - தன்
வசிப்பிடமாய் கொண்ட வாகீசர்!

வெற்றி எனும் வம்சாவளி
வழி வந்த வாகீசர்!

வரையறுத்து வகுப்பு நடத்தும்
வல்லவர்களைக் கொண்ட வாகீசர்!

சித்திர வதன குழந்தைகளை
வர்ணம் தீட்டும் வாகீசர்!

வழக்கறிஞர், வைத்தியர் - எனும்
வர்கத்தை உருவாக்கும் வாகீசர்!

வருங்கால சங்கதியை
வளர்த்து விடும் வாகீசர்!

வந்தோரை வரவேற்று
வாழவைக்கும் வாகீசர்!

வண்டல்மண் கோலசிலாங்கூர் - வாசிகளின்
வரப்பிரசாதம் வாகீசர்!

வண்ண வண்ண நினைவுகளை
வருடுகின்ற வாகீசர்! எங்கள் வாகீசர்!

ஆக்கம்
குமாரி வீ ஜெகதாம்பாள்

Wednesday, August 26, 2009

வாகீசர் என்றால்.................

வாகீசர் என்பது சைவ சமய குரவர் திருநாவுக்கரசராகிய பெருந்தகையார்க்குள்ள வேறு திருப்பெயராகும். இவர்க்கு, இத் திருவதிகை வீரட்டானக் கோயிலில் ஒரு தனிக்கோயில் உண்டு. இக்கோயிலைக் கட்டியவர், கூத்தனான காலிங்கராயர் ஆவார்.




ஈச னதிகையில்வா கீச னெழுந்தருள
மாசில் பெருங்கோயில் வந்தமைத்தான் - பூசல்
விளைவித்த வேணாடும் வெற்பனைத்துஞ் செந்தீ
வளைவித்தான் தொண்டையார் மன்.

என்னும் வீரட்டானக்கோயில் கல்வெட்டுப் பாடலால் விளங்கும்.

குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு