

அனைவருக்கும் எனது மனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
வனப்பு மிகுந்த இயற்கைதனை
வளைத்திருக்கும் வாகீசர்!
வரலாற்றுத் தடயங்களை - தன்
வசிப்பிடமாய் கொண்ட வாகீசர்!
வெற்றி எனும் வம்சாவளி
வழி வந்த வாகீசர்!
வரையறுத்து வகுப்பு நடத்தும்
வல்லவர்களைக் கொண்ட வாகீசர்!
சித்திர வதன குழந்தைகளை
வர்ணம் தீட்டும் வாகீசர்!
வழக்கறிஞர், வைத்தியர் - எனும்
வர்கத்தை உருவாக்கும் வாகீசர்!
வருங்கால சங்கதியை
வளர்த்து விடும் வாகீசர்!
வந்தோரை வரவேற்று
வாழவைக்கும் வாகீசர்!
வண்டல்மண் கோலசிலாங்கூர் - வாசிகளின்
வரப்பிரசாதம் வாகீசர்!
வண்ண வண்ண நினைவுகளை
வருடுகின்ற வாகீசர்! எங்கள் வாகீசர்!
ஆக்கம்
குமாரி வீ ஜெகதாம்பாள்